- மாநிலங்களவை இடைத்தேர்தல்கள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேர்தல் ஆணையம்
- தில்லி
- ராஜ்ய சபா
- தேர்தலில்
- சி.வி.சண்முகம்
டெல்லி: தமிழ்நாட்டில் ஜூன் 18ம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சி.வி.சண்முகம் ராஜினாமாவை தொடர்ந்து காலியாக உள்ள இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மாநிலங்களவை இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுதாக்கல் செய்ய கடைசிநாள் – ஜூன் 8; ஜூன் 9-ஆம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும் என்றும் வேட்புமனுவை வாபஸ் பெற ஜூன் 11 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவின் சி.வி. சண்முகம், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், காலியானதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஜூன் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒருவருக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில், ஜூன் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி, மகாராஷ்டிரத்திலும் மாநிலங்களவை பதவியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனேத்ரா அஜித் பவார் ராஜினாமா செய்திருந்தார். அந்த காலியிடத்துக்கும் ஜூன் 18 இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும், 10 மாநிலங்களில் பதவிக் காலம் முடியவுள்ள 24 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடத்துக்கும் ஜூன் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
