×

மேற்கு ஆசியாவில் போர் பதற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்; ‘மீண்டும் காட்டாட்சி திரும்பும் அபாயம்’: சீன, ரஷ்யா அதிபர்கள் கூட்டறிக்கையால் டிரம்ப் கடும் ஆத்திரம்

பெய்ஜிங்: சீன, ரஷ்ய அதிபர்கள் சந்திப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் ஆத்திரமடைந்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2 நாள் அரசு முறை பயணமாக சீனாவுக்கு சென்றார். இது, உலகளவில் கவனத்தை ஈர்த்தது. அப்போது, இரு நாடுகளுககு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தவும், நல்லுறவை மேம்படுத்தவும் இருநாட்டு அதிபர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த சந்திப்பின் நிறைவில், வர்த்தகம், உட்கட்டமைப்பு, எரிசக்தி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் முக்கியமானதாக இருதரப்பு வர்த்தகத்தை டாலருக்கு பதிலாக, சீனாவின் யுவான் மற்றும் ரஷ்யாவின் ரூபிள் கரன்சிகளில் மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் நிதி உள்கட்டமைப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘சர்வதேச சூழ்நிலை மிகவும் சிக்கலாகி வருகிறது. சர்வதேச அமைதி மற்றும் வளர்ச்சி திட்டங்கள் புதிய அபாயங்களையும் சவால்களையும் சந்திப்பதுடன், சர்வதேச சமூகம் சிதறுண்டு போவதுடன், மீண்டும் காட்டாட்சி திரும்புவதற்கான அபாயம் உள்ளது. சர்வதேச விவகாரங்களை ஒரு தலைபட்சமாக நிர்வகிக்கவும், தங்களது நலன்களை உலகம் முழுவதும் திணிக்கவும், பல நாடுகளின் வளர்ச்சியை தடுக்கவும் சில நாடுகள் முயற்சி செய்கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர் இரு நாட்டு சந்திப்பு குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறுகையில், “மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் பதற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அது உலக வர்த்தகத்தை அடியோடு சீர்குலைத்துவிடும். இதற்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். போரை நிறுத்தி, ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தால் மட்டுமே உலகளாவிய எரிசக்தி விநியோகம், தொழில்துறை வினியோக சங்கிலி மற்றும் சர்வதேச வர்த்தக ஒழுங்கு ஆகியவை சீர்குலையாமல் தப்பிக்கும்’ என்றார்.

அதேநேரத்தில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தான் பெய்ஜிங் சென்றபோது சீனாவிடம் இருந்து 200 போயிங் விமானங்களுக்கான வர்த்தக ஆர்டரை பெற்று, சுமுகமான பேச்சுவார்த்தை நடத்திய சூழலில், அடுத்த சில நாட்களிலேயே புதினை வரவேற்று தனக்கு எதிராக சீனா கரம் கோர்த்திருப்பதை டிரம்ப் கடுமையாக எதிர்த்துள்ளார்.

ஈரானிய போர் விவகாரத்தில் அமெரிக்காவின் நகர்வுகளையும், அணு ஆயுத பெருக்க கொள்கையையும் சீனா-சைபர் செக்யூரிட்டி கூட்டணி விமர்சிப்பது உலக ஸ்திரத்தன்மைக்கு அவர்களே முட்டுக்கட்டை போடுவது போன்றது என்று டிரம்ப் தரப்பு சாடியுள்ளது. மேலும், ‘இது, அமெரிக்காவிற்கு நல்லதல்ல. தனது ஆட்சியில் இவர்களின் கூட்டணியை உடைக்க போகிறேன்’ என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

Tags : West Asia ,Trump ,Russia ,BEIJING ,U.S. ,PRESIDENT TRUMP ,US ,President ,China ,Chancellor ,Vladimir Mint ,
× RELATED பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கு...