×

கிரிக்கெட் வீரரின் காதல் வதந்திகளுக்கு மத்தியில் ‘நீட்’ தேர்வுக்கு தீவிரமாக படிக்கும் நடிகை: உண்மையை போட்டு உடைத்த தாய்

ஐதராபாத்: நடிகை ஸ்ரீலீலா மற்றும் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா இடையிலான காதல் வதந்திகளுக்கு அவரது தாயார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா, இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது திலக் வர்மாவின் விளையாட்டு சீருடையை அணிந்து ஸ்ரீலீலாவின் குழுவினர் மைதானத்திற்கு வந்ததாகக் கூறப்பட்ட தகவல்கள் ரசிகர்களிடையே விவாதத்தை உருவாக்கின.

மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாட்டாகப் பேசிய வீடியோ ஒன்றும் இந்த வதந்திகளுக்குத் தீனி போடும் வகையில் அமைந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் பின்தொடர்வதை நிறுத்தியதாகவும் பல்வேறு யூகங்கள் கடந்த சில நாட்களாக இணையத்தில் உலவின. இந்த வதந்திகள் குறித்து ஸ்ரீலீலாவின் தாயார் டாக்டர் சுவர்ணலதா தற்போது அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை; இதில் துளியும் உண்மையில்லை. ஸ்ரீலீலாவும் திலக் வர்மாவும் இதுவரை நேரில் சந்தித்தது கூட இல்லை. வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நீட் முதுகலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு ஸ்ரீலீலா தீவிரமாகத் தயாராகி வருகிறார். அவர் கல்வியிலும் சினிமாவிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தனிப்பட்ட திருமண விஷயங்களுக்கு இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் கால அவகாசம் உள்ளது’ என்று கூறினார்.

Tags : Hyderabad ,Srileela ,Tilak Verma ,Sri Leela ,Tilak Varma ,
× RELATED முதலிரவில் கணவன் அதிர்ச்சி தகவல் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை