×

தூத்துக்குடி அருகே மழையில் நனைந்து 5000 நெல் மூட்டைகள் சேதம்.. விவசாயிகள் வேதனை

பெருங்குளம்: தமிழகத்தில் பல பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC) போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தில் மழையில் நனைந்து சுமார் 5000 நெல் மூட்டைகள் கடுமையாக சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சுமார் 10,000 நெல் மூட்டைகள் தேக்கமடைந்து இருக்கும் நிலையில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இப்போதே மழையில் நனைந்து சேதமான பல மூட்டைகளில் இருக்கும் நெல்மணிகளில் முளைப்பு ஏற்பட்டு வீணாக போயுள்ளது. இந்த நிலை மேலும் நீடித்தால் தங்கள்து வருவாய் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அரசுக்கும் பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட கூடும் விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

அதே போல கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விரைந்து சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பாமல் திறந்த வெளியிலேயே பல நாட்கள் வைப்பதன் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழையால் நெல்மூட்டைகள் சேதமாவதாகவும், இதனை தடுக்கவும் இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மழையில் நெல் மூட்டைகள் நனைவது குறித்து பேசிய விவசாயிகள், மழையால் மேல் மூட்டைகள் நனைவதன் காரணமாக நெல்மணிகள் முளைக்க தொடங்குவதாலும், நிறம் மாறுவதாலும் அவற்றை கொள்முதல் நிலையங்கள் ஏற்க மறுக்கின்றன.இதனால் தாங்கள் கிலோ கணக்கில் எடையை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம் என்று கூறி உள்ளனர்.

Tags : Tuthukudi ,Perunkulam ,Tamil Nadu ,Perungulam, Tuthukudi district ,
× RELATED கொள்கை அரசியலில் திமுக ஒருபோதும் தோற்றதில்லை – உதயநிதி ஸ்டாலின்