×

சூப்பர் செஸ் கிளாஸிக் பிரக்ஞானந்தா டிரா

 

புகாரெஸ்ட்: ரொமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் சூப்பர் செஸ் கிளாஸிக் போட்டிகள் நடந்து வருகின்றன. 2வது சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர் சிண்டாரோவை வீழ்த்தி இருந்த தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, 3வது சுற்றுப் போட்டியில் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமர் உடன் மோதினார். இரு வீரர்களும் சமபலத்துடன் சிறப்பாக ஆடியதால், இப்போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து, 2 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் மேக்ஸிம் வஷியர் லாக்ரேவ், நெதர்லாந்தின் ஜோர்டென் வான் பாரஸ்ட் ஆகியோர் கூட்டாக முதலிடம் வகிக்கின்றனர்.

Tags : Super Chess Classic Praggnanandhaa Draw ,Bucharest ,Super Chess Classic ,Bucharest, Romania ,Indian Grand Master ,Praggnanandhaa ,Tamil Nadu ,Uzbekistan Grand Master ,Jawogir Chindaro ,
× RELATED பஞ்சாப் அணியை 23 ரன்கள்...