×

பஞ்சாப் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றிற்குள் நுழைந்தது ஆர்சிபி!

தர்மசாலா: இன்று நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்தது.

காயத்தால் கேப்டன் ரஜத் படிதார் இல்லாத நிலையிலும், விராட் கோலி எடுத்த 58 ரன்கள் (37 பந்துகள்) கொடுத்த அடித்தளத்தால், தேவ்தத் படிக்கல் (45) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (73*) ஜோடி அதிரடியாக ஆடி, ஆர்சிபி அணியை 222/4 என்ற இமாலய இலக்கை எட்ட வைத்தது.

223 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆர்சிபி-யின் புவனேஷ்வர் குமார், ஆபத்தான துவக்க வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரை முதல் 3 ஓவர்களிலேயே வீழ்த்தினார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் ரசிக் சலாம் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பஞ்சாப் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் (56 ரன்கள்) அதிரடியாக ஆடி திருப்புமுனை ஏற்படுத்த முயன்றார். ஆனால் புவனேஷ்வர் மற்றும் ஹேசில்வுட் இணையின் சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணி கட்டுப்படுத்தப்பட்டது. இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனடிப்படையில் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

தொடரின் பாதியில் பலமாக தெரிந்த ஸ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் அணி, தற்போது தொடர்ச்சியாக 6 தோல்விகளை தழுவி பிளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Tags : RCB ,Punjab team ,Dharmasala ,IPL ,Royal Challengers Bangalore ,Punjab Kings ,Rajat Badithar ,Virat Kohli ,
× RELATED மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நடந்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!