×

கிரேன் உடைந்து 50 அடி உயரத்திலிருந்து ரயில் இன்ஜின் விழுந்து விபத்து: ஈரோடு பணிமனையில் பரபரப்பு

 

ஈரோடு: ஈரோடு பணிமனையில் கிரேன் உடைந்து 50 அடி உயரத்தில் இருந்து ரயில் இன்ஜின் விழுந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே எலக்ட்ரிக் லோகோ (மின்சார ரயில்) பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் எலக்ட்ரிக் ரயில் இன்ஜினில் ஏற்படும் பழுதுகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை எலக்ட்ரிக் லோகோ பணிமனையில் ஒரு ரயில் இன்ஜினில் ஏற்பட்ட பழுது நீக்க கிரேன் மூலம் தூக்கப்பட்டது.

அப்போது 80 டன் எடை கொண்ட ரயில் இன்ஜின் பாரம் தாங்காமல் கிரேன் உடைந்தது. இதில் 50 அடி உயரத்தில் இருந்து ரயில் இன்ஜின் கீழே விழுந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்துக்கு காரணம் முறையான கால இடைவெளியில் இயந்திரங்கள் மற்றும் கிரேன் போன்றவற்றை பாரமரிக்காததே என ரயில்வே பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.

Tags : Erode ,Erode Railway Station ,
× RELATED ஆங்கிலேயர் காலத்தில் பின்பற்றப்பட்ட...