×

அதிமுக விரைவில் ஒன்றாகும்: லீமாரோஸ் நம்பிக்கை

கோவை: கோவை விமான நிலையத்தில், திருச்சி லால்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ் மார்ட்டின் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக சிலர் அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. எல்லா கட்சியிலும் நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு இருக்கும். பின்னர் அது சீராகும். அதுபோல், அதிமுகவில் நிர்வாகிகள் இடையே தற்போது சில கருத்து வேறுபாடு இருக்கிறது.

அது விரைவில் சீராகும். நாங்கள் எல்லோரும் கட்சியை ஒன்னுசேர்க்கத்தான் முயற்சி பண்றோம். எங்களால் கட்சி பிளவுபடவில்லை. கூடிய சீக்கரம் நாங்க ஒன்னா சேர்ந்திருவோம். தமிழக வெற்றிக் கழகத்திற்கு நாங்க சப்போர்ட் பண்ணியிருக்கோம். அவ்வளவுதான். கட்சியை அங்கு கொண்டுபோய் இணைக்கவில்லை. கடந்த திமுக அரசின் திட்டங்களை தற்போதைய முதல்வர் விஜய் தொடர்வது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,Leemaros ,Coimbatore ,Trichy Lalgudi ,MLA ,Leemaros Martin ,
× RELATED பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஆளுநர் அர்லேகர் சென்னை வருகை