×

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ரூ.15,803 கோடியில் 650 ஏக்கரில் போர் விமான தொழிற்சாலை: ஒன்றிய அமைச்சர், முதல்வர் அடிக்கல் நாட்டினர்

திருமலை: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 650 ஏக்கரில் ரூ.15,803 கோடி மதிப்பில் அதிநவீன போர்விமான தொழிற்சாலைக்கு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங், முதல்வர் சந்திரபாபுநாயுடு அடிக்கல் நாட்டினர். ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியில் 650 ஏக்கர் பரப்பளவில் ரூ.15,803 கோடி மதிப்பில் அதிநவீன போர் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முதல்வர் சந்திரபாபுநாயுடு மற்றும் அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.

தொடர்ந்து மேம்பட்ட நடுத்தர போர் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாதுகாப்பு மற்றும் ட்ரோன் நகரத்தில் வேறு சில திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், முதல்வர் சந்திரபாபுநாயுடு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஏவுகணைகள், கையெறி குண்டுகள், நவீன துப்பாக்கிகள் மற்றும் போர் விமான முன்மாதிரிகள் போன்ற பாதுகாப்பு தயாரிப்புகளின் கண்காட்சியை பார்வையிட்டனர்.

முதல்வர் சந்திரபாபுநாயுடு மேலும் பேசுகையில், `இதுவரை தங்கம் என்றால் கோலார் தங்க வயல் (கே.ஜி.எப்) என்று மட்டுமே கூறிவந்தோம். ஆனால் தற்போது தங்கம் என்றால் ஜொன்னகிரி தங்க வயல் (ஜெ.ஜி.எப்) என மாறவுள்ளது. கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரியில் தங்க வயல் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு ஜொன்னகிரி தங்க வயலில் 600 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்படும். இரண்டாம் ஆண்டில் 1500 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்படும்’. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Union Minister ,Chief Minister ,Puttaparthi, Andhra Pradesh ,Tirumala ,Rajnath Singh ,Chandrababu Naidu ,Puttaparthi, Sri Sathya Sai district, Andhra Pradesh ,
× RELATED ஒன்றிய அரசு அறிவிப்பு ஜூன் 21ம் தேதி...