×

திராவிடர் கழகத்தை ஒருங்கிணைத்து நீட் தேர்வு ரத்து கோரி நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய நீட் தேர்வு முறை தமிழக மாணவர்களை கடுமையாக பாதித்து வருகிறது. அரியலூர் அனிதா தொடங்கி பல மாணவ, மாணவியர் உயிரை பறித்து வரும் துயரமும் தொடர்கிறது.

இந்த நிலையில் அண்மையில் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்து விட்டதாகக் கூறி, நடந்து முடிந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, 22 லட்சத்துக்கும் அதிகமானோர் எதிர்காலத்தை நிலை குலைத்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் கழகம் ஒருங்கிணைந்து நாளை 16ம்தேதி சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கலந்து கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Dravidar Kazhagam ,Indian Communists ,Chennai ,Indian Communist ,State Secretary ,M. Veerapandian ,Union Government ,Ariyalur Anitha ,
× RELATED ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு