×

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தம்? – தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழக அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள், வதந்திகள் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. கடந்த திமுக அரசின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் விடியல் பயணத்திட்டதின் அரசு மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணித்து வந்தனர்.

ஆனாலும் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. பேருந்து பயணத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து எந்தவொரு அரசாணையோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ வெளியிடப்படவில்லை என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED முதலமைச்சர் விஜயின் ராஜினாமாவைத்...