×

+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வரும் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரை மேல்நிலை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: 11ம் வகுப்பு மற்றும் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வரும் மே 18ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஜூன்,ஜூலை 2026 மேல்நிலை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியான சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் பதிவுகட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே மேல்நிலை பொதுத் தேர்வெழுதி தேர்ச்சிபெறாத பாடங்களில் தேர்வெழுதும் தேர்வர்கள் மேல்நிலை முதலாமாண்டு +1 Arrear மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு +2. ஓவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ35 செலுத்த வேண்டும். ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70. மேல்நிலை தேர்வினை முதன் முறையாக எழுதவுள்ள தேர்வர்கள். தேர்வுக் கட்டணம் ரூ.150 இதரக் கட்டணம் ரூ.35 மொத்தம் ரூ.185. ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ. 70. தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தினை சேவை மையத்தில் பள்ளியில் பணமாகச் செலுத்த வேண்டும்.

மே 18ம் தேதி முதல் 30ம் வரையிலான நாட்களில் ஜூன்,ஜூலை 2026 மேல்நிலை துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணத் ஜூன் 1ம் தேதி மற்றும்
2 ம் தேதி ஆகிய நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1000. 2025-2026ம் கல்வியாண்டில் அரசு மற்றும் முழுமையாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்களுக்கு மட்டும் இக்கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது

ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்குத் தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும். தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

 

Tags : Directorate of Government Examinations ,Chennai ,
× RELATED தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில்...