லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இடி மின்னலுடன் பெய்த கோடை மழையால் ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை, சூறைக்காற்றின் போது மின்னல் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் காலையில் வெயில், மாலையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துள்ளது. பிரயக்ராஜ், படோகி உள்பட 5 மாவட்டங்களில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ரவிதாஸ் நகர், பதேபூர், மிர்சாபூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், வீடுகள், சுவர்கள் இடிந்து விழுந்ததாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இடி மின்னலுடன் பெய்த கோடை மழையால் ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். 53 பேர் காயம் அடைந்துள்ளனர். கனமழைக்கு பிரயக்ராஜ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
