×

புள்ளிபட்டியலில் முன்னேறும் முனைப்பில் சன்ரைசர்ஸ் அகமதாபாத்தில் இன்று குஜராத்துடன் மோதல்

அகமதாபாத்: ஐபிஎல் 2026 தொடரின் ‘பிளே-ஆப்’ சுற்றை எந்த அணியும் உறுதி செய்யாத நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 56வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்- சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணி 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளதால் புத்துணர்ச்சியுடன் களம் காண்கிறது.

பேட்டிங்கில் கில், சாய்சுதர்சன், பட்லர் செம பார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். ஐதராபாத் அணியும் 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் அபிஷேக் சர்மா, கிளாசன், ஹெட் என மும்மூர்த்திகள் அதிரடியில் மிரட்டுகின்றனர். இஷான் கிஷன் பேட்டிங்கில் கைகொடுப்பதால் அந்த அணி வாகை சூடும் முனைப்பில் களமிறங்குகிறது. புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற சமபலம் வாய்ந்த இரு அணிகளும் முட்டி மோதும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இதில் 5ல் குஜராத்தும், ஒரு போட்டியில் சன்ரைசர்சும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Sunrisers ,Gujarat ,Ahmedabad ,IPL 2026 ,Gujarat Titans ,Sunrisers Hyderabad ,Narendra Modi Stadium ,
× RELATED ஐபிஎல்: குஜராத் அணிக்கு எதிரான...