×

மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

டெல்லி: கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. முறைகேடு காரணமாக நீட் தேர்வு முதல்முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மே 3 தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு மாதத்துக்கு முன்பே நீட் தேர்வு வினாத்தாள் வெளியானது. நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதற்கு கண்டனம் வலுத்தது.

இந்நிலையில் கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, மே 3ல் நடந்த நீட் தேர்வை அனுமதிப்பது முறையாகாது. மறுதேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். நீட் மறுதேர்வுக்கு கட்டணமில்லை; கடந்த முறை செய்யப்பட்ட பதிவெண் தொடரும். நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 89 முறை நீட் வினாத்தாள் கசிவு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தாலும் முதல்முறையாக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு குளறுபடி காரணமாக திட்டமிட்டப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை தொடக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : CBI ,Delhi ,National Examination Agency ,
× RELATED இலங்கை கடற்படையால் சிறை...