×

தவெகவை ஆதரிக்க அதிமுக சட்டமன்ற குழு கூட்டத்தில் முடிவு: சி.வி.சண்முகம் பேட்டி

சென்னை: அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்துள்ளோம். அதிமுக காப்பற்றப்படவேண்டும் என்பதில் தொண்டர்கள் அனைவரும் உறுதியாக உள்ளோம். தவெகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறோம். அனைவரும் பொறுப்பாக ஏற்கிறோம். ஒப்புக்கொள்கிறோம்.

அதிமுக காப்பாற்றப்பட வேண்டும். தொண்டர்கள் காப்பாற்றப்பட வேண்டும். பொதுக்குழுவை விரைந்து கூட்ட வேண்டும். பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி விரைவில் கூட்டுவார் என நம்புகிறோம். பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும். தவெகவை ஆதரிக்க அதிமுக சட்டமன்ற குழு கூட்டத்தில் முடிவு; அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி வேலுமணி தேர்வு, கொறடாவாக சி. விஜயபாஸ்கர் தேர்வு. தவெகவை ஆதரிப்பது என்பது அதிமுக பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவு.

அதிமுகவை உடைக்க வேண்டிய எண்ணம், நோக்கம் எங்களுக்கு இல்லை. அதிமுக உடைய நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம். அதிமுக இனி எந்த கூட்டணியிலும் இல்லை; தேர்தலுக்கு முந்தைய கூட்டணியிலும் இல்லை என்று கூறினார்.

Tags : Supreme Legislative Committee ,Taweka ,Shanmugham ,Chennai ,Atamugat ,C. V. Sanmugham ,National Democratic Alliance ,Taweq ,
× RELATED நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல...