- ஹிமந்தா பிஸ்வா சர்மா
- அசாம்
- முதல் அமைச்சர்
- குவஹாத்தி
- தேசிய ஜனநாயக கூட்டணி
- என்டிஏ
- பாஜக
- அஸ்ஸாம் கண பரிஷத்
- போடோலாந்து மக்கள் முன்னணி
- பி.டி.பி.
கவுகாத்தி: அசாமில் இரண்டாவது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று முதல்வராக பதவியேற்க உள்ளார். அசாம் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ, அசாம் கண பரிஷத் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 126 இடங்களில் 102 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதில் பாஜ மட்டும் 82 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் முதல் கட்சியாக உருவெடுத்தது. அசாம் கண பரிஷத் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவை தலா பத்து தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இதனையடுத்து இரண்டாவது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இன்று பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கும், புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரணமானமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இந்த அமைச்சரவையில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று தெரிகின்றது. பதவியேற்பு விழா முடிந்ததும் முதல் 100 நாட்களுக்கான முன்னுரிமை திட்டங்களை சர்மா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் சில நில உரிமைகள் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பான உறுதிமொழிகளும் இடம்பெறும் என்று தெரிகின்றது.
