×

47-ல் 17 எம்எல்ஏ-க்கள் மட்டுமே… அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்பட ஆதரவு

சென்னை: சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வென்றிருந்தது. அரசியல் களத்தில் புதிதாக நுழைந்த தவெக 108 இடங்களிலும், ஆளுகட்சியாக இருந்த திமுக கூட்டணியாக சேர்ந்து 73 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

இந்நிலையில் 10 தோல்வி பழனிசாமி 11-ஆவது தோல்வியை சந்திப்பார் என்ற திமுக-வின் விமர்சனம் உண்மையானது. தேர்தலில் மூன்றாவது இடத்தையே அதிமுக-வால் பிடிக்க முடிந்தது. இதனால் உட்கட்சி பூசல் பகிரங்கமாக வெடிக்க துவங்கியது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த நிர்வாகிகள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம் சாய காத்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு அச்சாரமாக எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு, எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் 47 அதிமுக எம்எல்ஏ-க்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏ-க்கள் மட்டுமே பேரவை செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது

 

Tags : Edappadi Palanisami ,Supreme Assembly Party ,Chennai ,Adimuka ,Dimuka ,Palanisamy ,
× RELATED தொடர் தோல்விகளால் கடும் அதிருப்தி...