- தலைவர் பதவியேற்பு விழா
- சென்னை
- நகராட்சி
- சென்னை நகராட்சி
- தமிழ்
- தமிழ்நாடு
- நெரு உட்புற விளையாட்டு அரங்கம்
- சென்னை பெருநகர நகராட்சி
சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் தலைமையில், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை 10 மணியளவில், தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பதவியேற்கும் விழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கீழ்காணும் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அண்ணாநகர் டவர் பார்க், மெரினா கடற்கரை, கோயம்பேடு, சென்ட்ரல் ரயில் நிலையம், தி.நகர் பேருந்து நிலையம், பெசன்ட்நகர் கடற்கரை, திருவான்மியூர் பேருந்து நிலையம், கத்திப்பாரா மேம்பாலம், செம்மொழி பூங்கா, தீவுத்திடல் பேருந்து நிலையம், நாகேஸ்வரா பார்க், மயிலாப்பூர் டேங்க் ஏரியா, வடபழனி பேருந்து நிலையம், எம்ஜிஆர் மார்க்கெட் பகுதி, சோழிங்கநல்லூர், போரூர் ஜங்சன், மாதவரம் பேருந்து நிலையம், அம்பத்தூர் ஓ.டி.பேருந்து நிலையம், தண்டையார்பேட்டை பஸ் டிப்போ ஏரியா, அடையாறு டிப்போ ஜங்சன் ஆகிய 20 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
