×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட்: தேவஸ்தானம் அறிவிப்பு

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட் மற்றும் அறைகள் முன்பதிவு செய்வதற்கான விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவைகளுக்கான டிக்கெட்களுக்கு குலுக்கல் மூலம் பெற மே 18ம் தேதி காலை 10 மணிக்கு மேல் ஆன்லைனில் பதிவு செய்யலாம். 20ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களில் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மே 20ம் தேதி முதல் 22ம் தேதிக்குள் மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தியவர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவைகளுக்கு மே 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதேசேவைக்கு விர்சுவல் டிக்கெட் பெற (சேவையில் பங்கேற்காமல் நேரடியாக சுவாமி தரிசனம்) மே 21ம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

இதேபோல், வருடாந்திர பவித்ரோற்சவத்திற்கான (23-08-26 முதல் 25-08-26 வரை) டிக்கெட்டுகளும் மே 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அங்க பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்களுக்கான ஒதுக்கீடு மே 23ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
தரிசனம், அறை முன்பதிவுக்கான டிக்கெட்கள், அறைகள் ‘https://ttdevasthanams.ap.gov.in’ என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tirupati Ezhumalaiyan Temple ,Tirumala ,Devasthanam ,Tirupati ,Ezhumalaiyan ,Temple ,Subrapadham ,Thomalai ,Archanai ,Ashtala ,
× RELATED பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு...