×

சட்டப்பேரவை தேர்தலில் பாஜ படுதோல்வி 27 தொகுதியில் போட்டியிட்டு 1 தொகுதியில் மட்டுமே வெற்றி: நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை, வானதி சீனிவாசன் மண்ணை கவ்வினர்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜ படுதோல்வியை சந்தித்துள்ளது. 27 தொகுதியில் போட்டியிட்டு 1 தொகுதியில் மட்டுமே பாஜவால் வெற்றி பெற முடிந்துள்ளது. நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் தோல்வியை சந்தித்து மண்ணை கவ்வினர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, பாஜ போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் பின்னடைவைச் சந்திக்க தொடங்கியது.

பல தொகுதிகளில் பாஜவின் முக்கிய வேட்பாளர்களே எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் பெறாதது பாஜ வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக நகர்ப்புறம் மற்றும் கொங்கு பகுதிகளில் பாஜ பலம் கொண்டதாக கருதப்பட்ட பகுதிகளிலும் பின்னடைவு தான் பாஜவுக்கு கிடைத்தது. பாஜ மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பியூஸ் கோயல் உள்ளிட்ட பல ஒன்றிய அமைச்சர்கள் பல்வேறு மாநில முதல்வர்கள், மாநில தலைவர்கள் என்று அடுத்தடுத்து தமிழகத்திற்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பிரதமர் மோடி பல முறை தமிழகம் வந்தார். அவர் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  என்ன தான் பிரசாரத்தில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் பாஜவால் வெற்றி பெற முடியாது என்ற நிலையை தமிழக மக்கள் மீண்டும் நீருபித்துள்ளனர். கடந்த முறை தேர்தலிலாவது பாஜவுக்கு 4 இடங்கள் கிடைத்தது. அதாவது, நயினார் நாகேந்திரன்- திருநெல்வேலி, வானதி சீனிவாசன்-கோவை தெற்கு, எம்.ஆர்.காந்தி- நாகர்கோவில், சி.சரஸ்வதி- – மொடக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்றனர்.

இதில் கடந்த முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், சாத்தூர் தொகுதியிலும், கோவை தெற்கில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், கோவை வடக்கிலும், எம்.ஆர்.காந்தி நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சி.சரஸ்வதிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், இந்த முறை ஒரு இடம் மட்டுமே கிடைத்ததுள்ளது. உதகமண்டலம் தொகுதியில் போட்டியிட்ட போஜராஜன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் பாஜ சார்பில் முக்கிய தலைவர்கள் தேர்தலை சந்தித்தனர்.

அதாவது சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அவிநாசியில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், தஞ்சாவூர் தொகுதியில் முருகானந்தம், திருப்பத்தூரில் திருமாறன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், விளவங்கோட்டில் விஜயதரணி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். ஆனால், அவர்கள் ஒருவரும் கூட வெற்றி பெற முடியவில்லை. தலைவர்கள் அனைவரும் தோல்வியை சந்தித்தது தான் மிச்சம். தலைவர்கள் தோல்வியை சந்தித்துள்ளது கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : BAJA BADUDALVI ,NAINAR NAGENDRAN ,L. Murugan ,Tamilyasaya ,Vaanathi Sinivasan ,Chennai ,Bahja ,Tamil Legislative Assembly elections ,Bajal ,Nayinar Nagendran ,L. Leaders ,Murugan ,Tamil ,Nadu ,Soundararajan ,Vaanati Sinivasan ,
× RELATED யாருக்கும் தனி மெஜாரிட்டி...