×

NEET நுழைவுத் தேர்வு: தமிழ்நாடு அரசின் ‘நட்புடன் உங்களோடு’ திட்டத்தில் மனநல ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘நட்புடன் உங்களோடு’ திட்டத்தில் மனநல ஆலோசனைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவிக்கப்பட்டுள்ளன. 14416 அல்லது 104 என்ற எண்களை அழைத்து மாணவர்கள் மனநல ஆலோசனை பெறலாம்.

மருத்துவ பட்டப்படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வருகின்ற 03.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, ‘டெலி கவுன்சிலிங்’ (Tele Counselling) தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம். 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,
× RELATED தொடரும் விஜயின் ஆன்மீகப் பயணம்;...