சென்னை: வணிக சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.993 உயர்த்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு கணித்தது போலவே, தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. ஈரான் போர் என்ற நெருக்கடியை பயன்படுத்தி சிலிண்டர் விலையை உயர்த்துவது சரியல்ல என்று கூறியுள்ளார்.
