×

தாமஸ் கோப்பை பேட்மின்டன் இந்தியா – சீன தைபே காலிறுதியில் மோதல்

ஹார்சன்ஸ்: தாமஸ் கோப்பை பேட்மின்டன் போட்டியில் இன்று, இந்தியா – சீன தைபே அணிகள் மோதவுள்ளன.  தாமஸ் கோப்பை ஆடவர் பேட்மின்டன் போட்டிகள் டென்மார்க்கின் ஹார்சன்ஸ் நகரில் நடந்து வருகின்றன. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, சிறப்பாக ஆடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இன்று நடக்கும் காலிறுதிப் போட்டியில் இந்தியா, சீன தைபே அணிகளின் வீரர்கள் மோதவுள்ளனர். ஏ பிரிவில் நடந்த போட்டிகளில் இந்திய அணி, முதலில் கனடாவை 4-1 என்ற கணக்கில் வென்றது. பின் ஆஸ்திரேலியாவை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடியது. கடைசியாக நடந்த போட்டியில் சீனாவிடம், 2-3 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

Tags : Thomas Cup Badminton ,India ,Chinese ,Taipei Quarterfinals ,Horsnes ,Taipei ,Thomas Cup ,Horsnes, Denmark ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு...