திருவனந்தபுரம்: கும்பமேளா மூலம் பிரசித்தி பெற்றவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மோனாலிசா. கடந்த இரு மாதங்களுக்கு முன் இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பர்மான் கான் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் தன்னுடைய மகளுக்கு 16 வயது மட்டுமே ஆகி உள்ளதால் அவரை திருமணம் செய்த பர்மான் கான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மோனாலிசாவின் தந்தை மத்திய பிரதேச மாநில போலீசில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து பர்மான் கான் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மணிப்பூர் டைரி என்ற படத்தில் நடித்து வரும் தன்னிடம் அந்தப் படத்தின் டைரக்டர் சனோஜ் மிஸ்ரா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்றும், அவர் சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும் கூறி மோனாலிசா எர்ணாகுளம் மத்திய போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து சனோஜ் மிஸ்ரா மீது எர்ணாகுளம் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
