×

கருத்துக்கணிப்புகள் பொய்த்து போகும் பசுமை, வெண்மை புரட்சி போல தமிழகத்தில் விசில் புரட்சி: செங்கோட்டையன் விரக்தி பேட்டி

 

கோவை: கோவை விமான நிலையத்தில் இன்று காலை தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து வாக்குகள் வரும் மே 4ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில், நேற்று வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தமிழகத்தில் மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த கணிப்புகள் முற்றிலும் பொய்த்துப் போகும். கருத்துக்கணிப்புகளுக்கும் உண்மையான தேர்தல் வெற்றிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

மேட்ரிஸ், என்டிடிவி, ரிபப்ளிக் போன்ற நிறுவனங்களின் கணிப்புகளை தாண்டி களயதார்த்தம் வேறாக இருக்கிறது. இந்திய வரலாற்றில் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி எனப் பல்வேறு மாற்றங்களை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் இப்போது தவெக தலைவர் விஜய்யின் ‘‘விசில் புரட்சி’’ தான் தமிழகத்தில் மட்டுமல்லாது உலகளவிலும் பெரிய அளவில் பேசப்படப் போகிறது. தமிழக வெற்றிக் கழகம் 200 தொகுதிகளுக்கு மேல் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Green ,White Revolution ,Tamil Nadu ,Sengottaiyan ,Coimbatore ,TAVEGA ,Chief Coordinator ,K.A. Sengottaiyan ,Tamil Nadu Assembly ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR Code...