பவானிபூர்: மேற்குவங்க மாநிலம் பவானிபூர் தொகுதியில் பாஜக வேட்பாளரை பொதுமக்கள் விரட்டியடித்தனர். மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் பாஜக வேட்பாளர், வாக்குச்சாவடிகளுக்குள் சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜக வேட்பாளரை முற்றுகையிட்டவர்கள் மீது மத்திய பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியதால் பதற்றம் நீடிக்கப்பட்டுள்ளது.
