சீனாவில் கடும் வெள்ளப்பெருக்கு

பெய்ஜிங்: தெற்கு சீனாவின் குவாங்சி பிராந்தியத்தில் அமைந்துள்ள கின்சோ நகரில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக நகரில் உள்ள பெரும்பாலான தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று முன்தினம் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 270மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வெள்ளப்பெருக்கில் சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் மூழ்கின.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளில் சிக்கியிருந்தவர்கள் மிதவை படகுகள் மூலமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் பிற்பகுதியிலேயே கனமழை பெய்துள்ளது அரிதானது என்றும் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: