×

36 பந்துகளில் சதம் விளாசிய மும்பை வீரரை தூக்கும் சிஎஸ்கே

சென்னை: ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 3 வெற்றி மட்டுமே பெற்று 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி விட்டார். இதனால் சிஎஸ்கே தனது பேட்டிங் வரிசையை பலப்படுத்த அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது.

அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ஆயுஷ் வர்தக் தற்போது சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார். ஆயுஷ் மாத்ரே போல் ஆயுஷ் வர்தக்கும் மிகச்சிறந்த அதிரடி வீரர். இவர் 2020-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் ஜூனியர் அணிக்காக விளையாடிய போது, காங்கா லீக் தொடரில் வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 23 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில், 6 இன்னிங்ஸ்களில் 363 ரன்கள் குவித்தார்.

இதில் 26 சிக்ஸர்கள் அடங்கும். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 2024-ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த 23 வயதுக்குட்பட்ட வீரர்’ விருதையும் ஆயுஷ் வர்தக் வென்றுள்ளார். ஆயுஷ் வர்தக்குக்கு சிஎஸ்கே அழைப்பு விடுத்ததற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். ஆயுஷ் வர்தக் மிடில் ஆர்டரில் வந்து ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, சிஎஸ்கேவுக்கு இவரைப் போன்ற ஒரு வீரர் தேவைப்படுகிறது.

Tags : CSK ,Mumbai ,Chennai ,IPL 2026 cricket festival ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு...