உதகை: உதகை அருகே சோலாடா கிராமத்தில் தாயுப் புலியை பிரிந்த 2 புலிக்குட்டிகளில் ஒன்று நேற்று பிடிபட்ட நிலையில், மற்றொன்று இன்று பத்திரமாக பிடிக்கப்பட்டது. இரு குட்டிகளையும் முதுமலை முகாமில் வைத்து கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும், தாய்ப்புலி வேறு பகுதிகளில் சுற்றி வருகிறதா? அல்லது இறந்துவிட்டதா? என்றும் வனத்துறையினர் தீவிரமாக வனப்பகுதியில் தேடி வருகின்றனர்
