சென்னை: காந்தி மண்டபம் மற்றும் IIT மெட்ராஸ் அருகே உள்ள சர்தார் பட்டேல் சாலை, சிக்னல் இல்லாத வகையில் விரைவில் மாற்றம் செய்யப்படு என்று சென்னை மாநகராட்சி துணை மேயர் கூறியுள்ளார். ஒரு மணி நேரத்துக்கு 11000 பேர் கடந்து செல்லும் இந்த சாலையில் போக்குவரத்தை எளிதாக்க 4 பாதைகள், ‘Free Left’ மற்றும் ‘U-Turn’ திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிந்து, புதிய போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வரும்
