×

கொல்கத்தா பேட்டர் ரகுவன்ஷிக்கு அபராதம்

லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டர் அங்கிரீஷ் ரகுவன்ஷி, பீல்டர் வீசிய பந்தை தடுத்ததற்காக, நடுவரால் அவுட் தரப்பட்டார். இதையடுத்து, ஆத்திரத்தில் அவர் சத்தமிட்டு கத்தியதாக தெரிகிறது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறும் வகையில் அவர் செயல் இருந்ததால், அவருக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு தகுதி குறைப்பு புள்ளியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த போட்டியில், சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Kolkata ,Raghuvanshi ,Lucknow ,Kolkata Knight Riders ,Angreesh Raghuvanshi ,IPL ,Lucknow Super Giants ,
× RELATED தோனி வருவாரா? பிளெமிங் கவலை