- உபர் கோப்பை பேட்மிண்டன்
- இந்தியா
- உக்ரைன்
- ஹார்ஸ்னெஸ்
- பெண்கள் அணி
- உபெர் கோப்பை மகளிர் பேட்மிண்டன்
- உபெர் கோப்பை
- ஹார்ஸ்னெஸ், டென்மார்க்
- இந்தியா...
ஹார்சன்ஸ்: உபெர் கோப்பை மகளிர் பேட்மின்டன் போட்டியில் நேற்று, இந்திய மகளிர் அணி, 4-1 என்ற கணக்கில் உக்ரைன் அணியை அபாரமாக வீழ்த்தியது. உபெர் கோப்பை பேட்மின்டன் போட்டிகள் டென்மார்க்கின் ஹார்சன்ஸ் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் இந்தியா – உக்ரைன் அணிகளை சேர்ந்த வீராங்கனைகள் மோதினர். முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, உக்ரைனை சேர்நத உலகின் 4ம் நிலை வீராங்கனை பொலினா புரோவா உடன் மோதினார்.
அப்போட்டியில் 21-19, 22-20 என்ற நேர் செட்களில் உன்னதி வென்றார். அடுத்து நடந்த மற்றொரு ஒற்றையர் போட்டியில் இந்தியாவை சேர்ந்த உலகின் 35ம் நிலை வீராங்கனை தான்வி சர்மா, உக்ரைனின் யெவ்ஹெனியா கேன்டெமிரை 21-12, 17-21, 21-10 என்ற செட் கணக்கில் வென்றார். 3வது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் தேவிகா சிஹாக், உக்ரைனின் மரியா ஸ்டோலியாரென்கோவை, 23-21, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
4வதாக நடந்த இரட்டையர் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கவிபிரியா செல்வம், சிம்ரன் சிங்கி தோல்வியை தழுவினர். கடைசியாக நடந்த இரட்டையர் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, தனிஷா கிராஸ்டோ இணை, 21-18, 2-15 என்ற நேர் செட்களில் உக்ரைனின் ஸ்டோலியாரென்கோ, சோபியா லாவ்ரோவா இணையை வீழ்த்தியது. இதனால், 4-1 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் இந்தியா, சீன மகளிருடன் மோதவுள்ளது.
