×

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 4வது டி.20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி

 

ஜோகன்னஸ்பார்க்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட டி.20 தொடரில் ஆடுகிறது. இதில் முதல் 3 போட்டியிலும் தென்ஆப்ரிக்கா வென்று தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் 4வது போட்டி நேற்றிரவு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன் எடுத்தது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43, அனுஷ்கா சர்மா 27, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 22 நாட் அவுட்டாக, தீப்தி சர்மா 36, ரிச்சா கோஷ் 34 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களே எடுத்தது. இதனால் 14 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. இந்திய பவுலிங்கில் தீப்தி சர்மா 5 விக்கெட் எடுத்தார். அவருக்கு ஆட்டநாயகி விருது கிடைத்தது. 3-1 என தென்ஆப்ரிக்கா முன்னிலை வகிக்க கடைசி போட்டி நாளை நடக்கிறது.

 

Tags : South Africa ,JOHANNESBURG ,WOMEN ,
× RELATED ஐபிஎல் 2026: சென்னை அணிக்கு எதிரான...