×

தேர்தல் விதி மீறி துண்டு பிரசுரம் வழங்கிய அதிமுகவினர் 3 பேர் மீது வழக்கு

முத்துப்பேட்டை,ஏப்.25: முத்துப்பேட்டை பகுதியில் தேர்தல் விதி மீறி துண்டு பிரசுரம் வழங்கிய அதிகமுவினர் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் மன்னவன் கோட்டகம் கிராமத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி சிலர் பொதுமக்களுக்கு அதிமுக விளம்பர துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து எடையூர் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் பொதுமக்களிடம் வழங்கியதாக அதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் வரதராஜன்(50), மணிகண்டன்(37), விஜய்(24) ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : 3 ,AIADMK ,Muthupettai ,Eyayoor Mannavan Kottagam ,Tiruvarur ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்