×

கழிவறைக்குள் பதுங்கிய சாரை பாம்பு பத்திரமாக பிடித்து வனப் பகுதிக்குள் விட்ட தீயணைப்பு துறையினர்

 

நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே செல்வமருதூர் பகுதியை சார்ந்தவர் அருணாச்சலம். இவர் இன்று மதியம் அவரது வீட்டினுள் உள்ள கழிவறைக்கு சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது உள்ளே 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை கண்டு அச்சமடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து திசையன்விளை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சாரை பாம்பை, பாம்பு பிடிக்கும் கருவியை கொண்டு லாபகமாக பத்திரமாக சாரைப்பாம்பை பிடித்தனர். பின்னர், அந்த சாரை பாம்பை பத்திரமாக அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர். மேலும், விரைந்து வந்து பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

 

Tags : fire department ,Nella ,Arunachalam ,Selvamarudur ,Nella District Dizaiyanwila ,
× RELATED பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கிக்கான...