×

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி மதிப்பில் 7 தங்க டாலர்கள் 753 கிராம் தங்க நகைகள் வழங்கினார் பெங்களூரு மருத்துவர்

 

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 7 தங்க டாலர்கள் 753 கிராம் தங்க நகைகளை வழங்கினார் பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் எம். மகாதேவம்மா. அதேபோல் ஹைதராபாத்தை சேர்ந்த எஸ்.சி.எஸ். டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னபிரசாத அறக்கட்டளைக்கு 10 லட்சத்து ஓராயிரத்து 116 ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.

திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து நேரடி இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரமும், டோக்கன்களுடன் கூடிய இலவச தரிசனத்திற்காக சுமார் 6 மணி நேரமும், 300 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்கள் சுமார் 4 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர்.

தமிழக பக்தர்களால் எப்போதும் நிரம்பி வழியும் திருப்பதி மலையில் கூட கடந்த 45 நாட்களாக பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப் போட்ட தமிழக பக்தர்கள் திருப்பதி மலையை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள காரணத்தால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய உள்ளிட்ட அடிப்படை தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுக்கிறது.

இதனிடையே, திருப்பதி ஏழுமலையானுக்கு இன்று பெங்களூரை சேர்ந்த டாக்டர் எம். மகாதேவம்மா சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பும் 753 கிராம் எடையும் உள்ள ஏழு தங்க டாலர்களை ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தாட ரவிச்சந்திராவிடம் நன்கொடையாக வழங்கினார். அதேபோல் ஹைதராபாத்தை சேர்ந்த எஸ்.சி.எஸ். டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னபிரசாத அறக்கட்டளைக்கு 10 லட்சத்து ஓராயிரத்து 116 ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.

அதேபோல் ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் கீத்திகா சாய் தேவஸ்தானத்தின் அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு 10 லட்சத்து 116 ரூபாயை நன்கொடையாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தாடா ரவிச்சந்திராவிடம் வழங்கினர். நன்கொடை வழங்கிய பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன.

Tags : Tirupathi Eumalaian ,Thirumalai ,Thirupathi ,Bangalore ,doctor ,M. Mahadevamma ,Hyderabad ,C. S. Thirumalai Thirupathi ,Technologies Institute ,
× RELATED ஆம் ஆத்மி மூத்த தலைவர் ராகவ் சத்தா...