×

லக்னோ ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை

லக்னோ: ஐபிஎல் போட்டி தொடரின் 32வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோ அர்டோனமு வாஜ்பாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. கேப்டன் ரிஷப்பண்ட் தலைமையிலான லக்னோ அணி, முதல் 2 ஆட்டங்களில் வென்ற நிலையில், கடைசியாக ஆடிய 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிராக 54 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. பேட்டிங்கில் ரிஷப் பண்ட், ரகுவன்ஷி, மார்க்ரம் பார்ம்மில் உள்ளனர். முகமது சமி, அன்ரிச் நோர்ட்ஜே வேகத்திலும், சித்தார்த் மணிமாறன் சுழலிலும் கலக்குகின்றனர்.

மறுபுறம் ராஜஸ்தான் அணி, முதல் 4 போட்டிகளில் வென்றநிலையில், அடுத்து ஆடிய 2 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. அதிலும் கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசி ஓவரில் வெற்றியை பறிகொடுத்தது. அதிரடி பேட்ஸ்மேன்களாக வைபவ் சூர்யவன்சி, ஜெய்ஸ்வால், கேப்டன் ரியான் பராக், துருவ் ஜூரல், ஹெட்மயர் கலக்குகின்றனர். பவுலிங்கில் ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, ரவி பிஷ்னோய், ஜடேஜா அட்டாக் செய்கின்றனர். கடந்த 2 போட்டிகளில் சரியாக சோபிக்காத வைபவ் சூர்யவன்சி இப்போட்டியில் சிக்சர்களாக பறக்கவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்று நடக்கும் லக்னோ-ராஜஸ்தான் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Tags : Lucknow ,Rajasthan ,Lucknow Super Giants ,Rajasthan Royals ,IPL ,Ardhonam Vajpayee Cricket Stadium ,Rishabh Pant ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 243...