×

ஜெயசூர்யாவின் அதிரடி சாதனையை 18 ஆண்டுக்கு பின் சமன் செய்த திலக்

அகமதாபாத்: ஐபிஎல் 30வது லீக் போட்டி அகமதாபாத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை (மலேவர், டி காக், சூர்யகுமார்) இழந்து தடுமாறியது. காகிசோ ரபாடா ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுத்தார். இந்த இக்கட்டான நிலையில் இணைந்த திலக் வர்மா மற்றும் நமன் தீர் (45 ரன்கள்) ஜோடி 52 ரன்கள் சேர்த்து அணியை மீட்டெடுத்தது. தொடக்கத்தில் நிதானமாக ஆடிய திலக், பிறகு அதிரடி காட்டினார். 33 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், அடுத்த 12 பந்துகளில் சதத்தை எட்டினார். இறுதியில் 101* ரன்களுடன் (8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) களத்தில் இருந்தார். திலக் வர்மாவின் இந்த அபார ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 199/5 ரன்களைக் குவித்தது. பின்னர் இந்த இலக்கை எட்ட முடியாமல் குஜராத் 100 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. 2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஜெயசூர்யா 45 பந்துகளில் சதம் அடித்ததே மும்பை அணியின் அதிவேக சதமாக இருந்தது. தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சாதனையை திலக் வர்மா சமன் செய்துள்ளார்.

Tags : Thilak ,Jayasuriya ,Ahmedabad ,IPL ,Mumbai ,Malevar ,De Kock ,Suryakumar ,Kagiso Rabada ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 243...