×

மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஊட்டி : கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் ஊட்டி மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனினும் கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இதுபோன்று ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், இங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் மற்றும் பைக்காரா அணை மற்றும் நீர்வீழ்ச்சி போன்ற பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இது மட்டுமின்றி ஊட்டி மலை ரயிலில் பயணிக்கவும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள், ஊட்டி – மேட்டுப்பாளையம், ஊட்டி – குன்னூர் இடையே மலைகளின் நடுவில் தவழ்ந்து செல்லும் மலைகளில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் ஊட்டி குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது மலை ரயில் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

Tags : Ooty ,Nilgiri district ,
× RELATED கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை...