×

மேற்காசிய போர் காரணமாக இந்தியாவின் வர்த்தகம், மைக்ரோ பொருளாதாரத்துக்கு ஆபத்து: நிதி ஆயோக் அறிக்கை

 

புதுடெல்லி: ”மேற்காசிய போர் காரணமாக இந்தியாவின் வர்த்தகம், மைக்ரோ பொருளாதாரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. நிதி ஆயோக்கின் காலாண்டுக்கான வர்த்தக கண்காணிப்பு அக்டோபர்-டிசம்பர்(க்யூ3) 2025-26 அறிக்கையை துணை தலைவர் சுமன் பெர்ரி நேற்று வௌியிட்டார்.

அந்த அறிக்கையில், “மேற்காசிய போர் நெருக்கடி காரணமாக இந்தியாவின் வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மைக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை விரிவுப்படுத்துவதுடன், ரூபாய் மதிப்பு மற்றும் பணவீக்க அழுத்தத்தை அதிகரிக்கும். அத்துடன், மேற்காசியாவின் தற்போதைய புவிசார் அரசியல் பதற்றம், இந்தியா வளைகுடா கூட்டுறவு கவுன்சில் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை மெதுவாக்கி உள்ளது. இது வர்த்தக பன்முகத்தன்மை மற்றும் சந்தை அணுகலை வெகுவாக பாதிக்கிறது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. தற்போது முக்கிய கடல்வழி பாதை மூடப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் இறக்குமதிகள் பாதிக்கப்பட்டு, விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சரக்கு போக்குவரத்தை 40 முதல் 50 சதவீதம் வரை உயர்த்தக்கூடும்.

எர்ன்ஸ்ட்&யங்(Ernst & Young) போன்ற நிறுவனங்களின் ஆய்வின்படி, மேற்காசிய போர் தொடர்ந்தால் இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி சுமார் 1 சதவீதம் குறையக்கூடும் மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : India ,Asian ,Niti Aayog ,New Delhi ,Vice Chairman ,Suman Perry ,
× RELATED 10 இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ்...