புதுடெல்லி: தேர்தல் ஆணையம் நேற்று வௌியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரிக்கு பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 15ம் தேதி முதல், 11,000க்கும் அதிகமான சட்டவிரோத சமூக ஊடக பதிவுகள், அடையாளம் காணப்பட்டு அதன் உள்ளடக்கங்கள் நீக்கம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல், யூஆர்எல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உள்ளடக்கத்தை நீக்குதல், முதல் தகவல் அறிக்கை பதிவு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு இணங்க, அனைத்து தரப்பினரும் சமூக ஊடகங்களையும், டிஜிட்டல் தளங்களையும், பொறுப்புடனும், அறநெறியுடனும் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
