- புன்னம்சத்திரம் வீனஸ் குளோபல் கேம்பஸ் பள்ளி
- சிபிஎஸ்இ
- வேலாயுதம்பாளையம்
- புன்னம்சத்திரம் வீனஸ் குளோபல் சிபிஎஸ்இ பள்ளி
- இந்தியா
- வீனஸ் குளோபல் கேம்பஸ் பள்ளி
- பஞ்சாம்பத்திரம்
- கரூர்
வேலாயுதம்பாளையம், ஏப். 19: புன்னன்சத்திரம் வீனஸ் குளோபல் சிபிஎஸ்இ பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். இந்தியா முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளி தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வில் கரூர் மாவட்டம் புன்னன்சத்திரம் பகுதியில் செயல்படும் வீனஸ் குளோபல் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். அதிக மதிப்பெண் பற்றி சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விவரம் வருமாறு இப்பள்ளி மாணவன் சக்திவேல் 491 மதிப்பெண்ணும், அகிலேஷ் 486 மதிப்பெண்ணும், ஜெனுசியா 478 மதிப்பெண்ணும், ரியாஸ்ரீ 474 மதிப்பெண்ணும் சஸ்மிதா 472 மதிப்பெண்ணும் பெற்று மாவட்ட அளவில் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். தொடர்ந்து 4 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் சி.குமரவேல், செயலாளர் நதியாகுமரவேல், முதல்வர் சுமையா ஆகியோர் பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி பாராட்டினார்.
