×

உணவுப் பழக்க வழக்கங்கள்…

நன்றி குங்குமம் டாக்டர்

*உடலுக்கு பலம் தரக்கூடிய, நன்றாக செரிக்கக்கூடிய இயற்கையான நல்ல உணவுகளையே எப்போதும் சாப்பிட வேண்டும்.

*மூன்று வேளை வயிறுமுட்ட சாப்பிட்டால்தான் மனதிருப்தி ஆகி சாப்பிட்டது போன்று இருக்கும் என்று நினைக்காமல் ஐந்து முறையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம்.

*தினமும் ஏதாவது ஒரு பழவகை, சாலட் என உணவோடு சேர்த்துக் கொள்வது அவசியம்.

*அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், தானிய வகைகள், கீரைகள் என அதிகம் சேர்த்து உண்ணுவது முக்கியம்.

*தினமும் அதிக அசைவம் சாப்பிடுவதையும், எண்ணெயில் வறுத்த தின்பண்டங்களை கொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

*பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், பழைய உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது.

*அதிக வேலையின் காரணமாகவோ அல்லது வேலை முடிந்து இரவு 9 அல்லது 10 மணிக்கு மேல் அலைந்துவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிடுபவராக நீங்கள் இருந்தால், சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் மிக மெதுவாக நடந்துவிட்டு படுக்கைக்கு செல்வது உடலுக்கு நல்லது.

*தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் அவசியம். அதோடு தண்ணீர் சத்து உள்ள பழ வகைகளையும் சேர்த்துக் கொள்வது சாலச்சிறந்தது. உதாரணமாக…. தர்பூசணி.. ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, தக்காளி, வெள்ளரிக்காய் முதலியன.

*சோம்பல் இல்லாத வாழ்க்கை முறை நல்லது. உடல் எடையை கவனித்து வாருங்கள். உடல்பருமன் பல்வேறு தொந்தரவுகளை தந்து உங்களை நோயாளி யாக மாற்றிவிடலாம். எச்சரிக்கையாக இருந்தால் நலமாக தொப்பை இல்லாமல் இளமையுடன் இனிமையாக வாழலாம்.

*காலை வெறும்வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாறு விட்டு குடித்தால் வயிற்றுக்கு நல்லது.

*காலை உணவைத் தவிர்க்காமல் நேரத்துக்கு சாப்பிட வேண்டும்.

*காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து அதிக அளவில் நார்ச்சத்து கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

*துவரம்பருப்பைத் தவிர்த்து பாசிப்பருப்பை அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*சாப்பாட்டின்போது இடையே அல்லது சாப்பாட்டுக்குப் பிறகு உடனே அதிகளவு நீர் அருந்தக் கூடாது.

*சாப்பிடும்போது நீர் குடிப்பதால் செரிமான நொதிகள் நீர்த்துப் போய்விடும்.

*சாப்பாட்டுக்கு முன் ஒரு டம்ளர் நீர் அருந்துவது நலம் தரும்.

*உணவு உண்ட பிறகு 40-60 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கலாம். இது செரிமானத்தைச் சரிசெய்யும்.

தொகுப்பு: ரிஷி

Tags :
× RELATED நரம்பு மண்டலம் எனும் அற்புதமான அமைப்பு!