×

தொகுதி மறுவரையறை, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும்: திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சு

 

டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும். தற்போதைய தொகுதி மறுவரையறை, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும். ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்த மசோதாக்கள் குறித்து தற்போது பிரதமர் முரண்பாடாக பேசுகிறார். 50 சதவிகிதம் அதிகரிப்பால் பாதிப்பு இல்லை என்று அமித்ஷா கூறுகிறார். தென்மாநிலங்கள் பாதிக்காது என்றால் 2 மசோதாக்கள் எதற்கு தாக்கல்?

நாடாளுமன்றத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் தவறான விவரங்களை அளிக்கின்றனர். தற்போதைய மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மாநில உரிமைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பார். தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக முழுமையாக எதிர்க்கிறது. மாநிலங்களுக்கு இடையே பாகுபாட்டை ஏற்படுத்த நினைக்கிறது ஒன்றிய அரசு; அந்த பாகுபாடு வடக்கு – தெற்கு பிரிவினையாக மாறும். அந்த பிரிவினையால் மத்தியில் நிரந்தர ஆட்சியை விரும்புகிறது என்று கூறினார்.

Tags : southern states ,Tamil Nadu ,Dimuka M. B. ,Raza ,Delhi ,Dimuka M. B. Yes. Raza ,southern ,
× RELATED தொகுதி மறுவரையறை விவகாரத்தில்...