×

குடிநீர் குழாயில் உடைப்பு

ஆண்டிபட்டி, ஏப்.17: ஆண்டிபட்டியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து வைகை அணை செல்லும் சாலையில், பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே பிரதான குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் சாலையில் வீணாகிறது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதமக்கள் கூறுகையில், \”பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாகிறது. வெயில் காலத்தில் குடிநீர் கிடைப்பது கடினமாக உள்ளது. எனவே, பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை உடனடியாக தடுக்க வேண்டும். சாலையில் குடிநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Andipatti ,Vaigai Dam ,Theni district ,BSNL ,
× RELATED வரத்து குறைவால் இளநீர் விலை கடும் உயர்வு