×

தொகுதி மறு வரையறை எதிர்த்து திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி நகல் எரிப்பு போராட்டம்

துறையூர், ஏப். 17: திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் கலைஞர் சிலைக்கு முன் திமுகவினர் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஒன்றிய அரசின் தொகுதி மறு வரையறை எதிர்த்து கருப்பு கொடி ஏந்தி, கருப்பு சட்டை அணிந்து ஒன்றிய அரசை கண்டித்து, ஒன்றிய அரசுக்கு துணை போகும் எடப்பாடியை கண்டித்தும் பல்வேறு கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கையில் இருந்த தொகுதி மறு வரையறை மசோதா நகல் எரித்து போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, சிவ சரவணன், நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, திமுக மாவட்ட பிரதிநிதி மதியழகன், நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், சுதாகர் அம்மன் பாபு, இளையராஜா, காங்கிரஸ் வட்டார தலைவர் அரவிந்தன், மதிமுக ஒன்றிய செயலாளர் ரவி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சங்கர், உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Tags : DMK ,Thuraiyur ,Secular Progressive Alliance ,Union government ,Kalaignar ,Trichy district ,
× RELATED துவரங்குறிச்சி அருகே 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது