சென்னை: தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றினார். நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் முதலமைச்சர் கருப்புக்கொடி ஏற்றினார். தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினர். மாநிலங்களின் உரிமைகளை பறிக்காதே என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் முழக்கம். மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்படுகிறது. முதலமைச்சர் கருப்புச் சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அணிந்து தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தல் பரப்புரை பயணத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல்லில் கருப்புக்கொடி ஏற்றினார். இன்று முதல் 3 நாள் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கலாகிறது. சென்னை தேனாம்பேட்டையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் இல்லம், கோபாலபுரத்திலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரையறையை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கருப்புக் கொடி ஏற்றப்படுகிறது. தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மதிமுக அலுவலகத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. பாஜகவுக்கு சாதகமாக தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுவதாக விமர்சனம். அனைத்து மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, வார்டு, பூத் அளவில் 11 மணிக்கு மசோதா நகலை எரித்து போராட்டம். அனைத்து வீடுகள், வணிக வளாகங்களிலும் இன்றுமுதல் 3 நாட்களுக்கு கருப்புக் கொடியை பறக்கவிட திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது; டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும் “தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!” இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
