காஸ் பங்கில் நீண்ட வரிசையில் காத்திருந்த ஆட்டோக்கள்

ஈரோடு, ஏப். 16: ஈரோட்டில் காஸ் பங்குகளில் வரத்து காரணமாக நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்களது காஸ் நிரப்பி சென்றனர். ஈரான் நாட்டுடன், அமெரிக்கா, இஸ்ரேல் போர் நடத்தி வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையலுக்கான காஸ், ஆட்டோ காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக பெரும்பாலான தனியார் ஆட்டோ காஸ் பங்குகளில் விநியோகம் நிறுத்தப்பட்டது.

பொதுத்துறை நிறுவன பங்குகளில் மட்டும் குறைந்த அளவு விநியோகித்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிக்கு ஆட்டோ காஸ் வரத்தானதால், ஆட்டோ டிரைவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நிரப்பினர். இதுகுறித்து ஆட்டோ காஸ் பங்க் நிர்வாகிகள் கூறியதாவது: பெட்ரோல், டீசலை விட ஆட்டோ காஸ் விலை குறைவு. கூடுதல் கிலோ மீட்டர் தூரம் இயக்கலாம் என்பதால், அதற்கு முன்னுரிமை கொடுத்து நிரப்புவர்.

கடந்த மார்ச் 10ம் தேதி வரை ஒரு லிட்டர் ரூ.59.80 விலையில் விற்பனையானது. தட்டுப்பாடு துவங்கியதும் ரூ.92 முதல் ரூ.100 வரை தனியார் பங்குகளில் விற்பனையானது. பின், விநியோகத்தை நிறுத்தி, அவ்வப்போது மட்டும் வழங்கினர். நேற்று பெரும்பாலான ஆட்டோ காஸ் பங்குகளுக்கு காஸ் வரத்தானதால், நீண்ட வரிசையில் காத்திருந்து ஆட்டோக்களில் நிரப்பினர். நேற்று ஒரு லிட்டர் ரூ.84.06 விற்பனை செய்தனர். தொடர்ந்து சில நாட்களுக்கு தடையின்றி கிடைக்கும், என்றனர்.

 

Related Stories: