- இபிஎஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காரைக்குடி
- தமிழ்
- தமிழ்நாடு
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- செல்வா பெருந்தகை
- முதல் அமைச்சர்
- ஸ்ரீ. கே. ஸ்டாலின்
- ஜனநாயக
காரைக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘தொகுதி மறுவரையறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரை மிரட்டுவதாக கூறுவது தவறானது. முதல்வர் மிரட்டவில்லை. ஜனநாயக நாட்டில் தமிழ்நாட்டிற்கு என்ன பாதகம், தீங்கு வந்தாலும் குரல் எழுப்புவது ஜனநாயக கடமை.
அந்த ஜனநாயக கடமையைத்தான், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காகத்தான் அவர் பேசியுள்ளார். மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டை சரியான முறையில் நடைமுறைப்படுத்தியது தமிழ்நாடு. எனவே மக்கள் தொகை அதிகரிப்பு இல்லை என்பதால் தமிழ்நாட்டை வஞ்சிக்கமுடியுமா? அதைத்தான் முதல்வர் கேட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி, கருப்பு உடையணிந்து எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம்’’ என்று தெரிவித்தார். தொகுதி மறுவரையறையில் எந்தவித பாதிப்பும் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என ெசய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘மோடி என்ன சொன்னாலும், தமிழ்நாட்டை எழுதி கொடுக்கிறீர்களா என்றாலும் எழுதி கொடுப்பதில் தப்பு இல்லை என எடப்பாடி கூறுவார்’’ என்று செல்வபெருந்தகை தெரிவித்தார்.
